இறப்பு: 2012-12-20
பிறந்த இடம்:நீர்வேலி *** வாழ்ந்த இடம்: நீர்வேலி
ஊரிக்காடு, கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு மகேஸ்வரி நேற்று (20.12.2012) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லக்கண்டுவின் அன்பு மனைவியும், அரசரத்தினம், தங்கவடிவேல் (ஆசிரியர் கிளி/பூநகரி மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயும், புஸ்பராணியின் அன்பு மாமியும், தயாழினி, பிருந்தா, வசந்தரூபி (பட்டதாரி பயிலுநர் பிரதேச செயலகம், கோப்பாய்), வர்ணரூபன் (மலேசியா), டிபர்சன் (மாணவன் தொழில் நுட்பவியல் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ் சென்றவர்களான நடராசா, கந்தசாமி, தங்கமணி மற்றும் செல்லப்பாக்கியம் (பிரான்ஸ்), நாராயணபிள்ளை, தங்கராஜா, யோகேந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (21.12.2012) வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நீர்வேலி சியாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - நீர்வேலி வடக்கு, நீர்வேலி.