இறப்பு: 2012-12-16
பிறந்த இடம்: உரும்பிராய் ***** வாழ்ந்த இடம்: நீர்வேலி
உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தங்கராசா நேற்று (16.12.2012) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப் பிள்ளை மற்றும் புஸ்பராணி தம்பதியரின் அன்பு மருமகனும், செல்வராணியின் அன்புக் கணவரும், திலகவதி, செல்வராணி (ஓய்வுபெற்ற ஆசிரியர்), ஜெகதீஸ்வரன் (ஓய்வுபெற்ற படவரைஞர்), மலர்தேவி (ஆசிரியர், கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம்), வத்சலாதேவி (ஆசிரியர், மானிப்பாய் மகளிர் கல்லூரி), காலஞ்சென்ற ரவீந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஜெயராசா, ஜெகநாதராசா, அருணாசலம், குணதீசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.12.2012) திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி சீயாக்காடு இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : த.செல்வராணி (மனைவி)
தொடர்புகளுக்கு
த.செல்வராணி (மனைவி) - அரசகேசரிப் பிள்ளையார் கோயிலடி, நீர்வேலி வடக்கு, நீர்வேலி.