Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல் திருமதி சரஸ்வதி அருணாசலம்





மலேசியாவைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மாசவன் சந்தி, நீர்கொழும்பு கடல் வீதி(See Street) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி அருணாசலம் அவர்கள் 08-11-2012 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அம்பலவாணர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை, அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு பாசமிகு மருமகளும்,

நீர்வேலியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அருணாசலம்(சிறப்பர் இளைப்பாறிய முன்னாள் நீர்கொழும்பு மாநகர சபை காசாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

அருந்ததி(கனடா), அம்பிகா(கனடா), ஆனந்தராசா(ஜேர்மனி), அனுஷியா(லண்டன்), அகிலேஸ்வரி( USA - New jersy) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அருளம்பலம் மற்றும் இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அரியராசா(கனடா), சூரியகுமார்(கனடா), குமுதினி(ஜேர்மனி), Dr. இராஜயோகன்(லண்டன்), சிவானந்தன்(USA - New Jersay) ஆகியோரின் பாசமுள்ள மாமியாரும்,

அபிராமி, தனுஷன், கிரிசன், தமிழரசன்(சங்கர்), தமிழினி(சந்தியா), யாழினி(சரண்யா), அக்ஷ்யா, அஞ்சனா, அபர்ணியா, செல்வி, அஸ்வினி, ஆரணி, சரண் ஆகியோரின் பாசமிக்க பேத்தியும் ஆவார்.

அன்னாரின் சமயக் கிரியைகள் 11-11-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:00 அவரது இல்லத்தில்(119, Sea Street - நீர்கொழும்பு) நடைபெற்று பி.ப 4:00 மணிக்கு நீர்கொழும்பு பொது இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆனந்தன் ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497214837843
அருந்ததி(மீரா) கனடா
செல்லிடப்பேசி: +14163358451
நீர்கொழும்பு இலங்கை
தொலைபேசி: +94312231293

Posted on 10 Nov 2012 by jeeva
Content Management Powered by CuteNews