பூதத்தம்பி தம்பிராசா
இறப்பு: 2012-07-25
பிறந்த இடம்: நீர்வேலி வாழ்ந்த இடம்: நீர்வேலி
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கு பத்தா வத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பூதத்தம்பி தம்பிராசா நேற்று (25.07.2012) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி பொன்னி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்து சின்னாச்சி தம்பதியரின் அன்பு மருமகனும், மாணிக்கத்தின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, கனகசிங்கம், முத்து, ரத்தினம், நேசமணி ஆகியோரின் சகோதரனும், கமலேஸ்வரி, கவிதா, நித்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும் சந்திரசேகரம், சசீலன் (ஆஸ்திரேலியா), சத்தியசீலன் ஆகியோரின் மாமனும், சயிந்தன், ரவீனா, சுகனி, சகானா ஆகியோரின் பேரனும், காலஞ்சென்றவர்களான தலயசிங்கம், கணேஸ் மற்றும் விபூஷணன் , நட்சத்திரம் ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (26.07.2012) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பல்க ஒருமணிக்கு நீர்வேலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - நீர்வேலி மேற்கு, பத்தாவத்தை, நீர்வேலி.