திரு. நடராசா இரத்தினேஸ்வரன் (சந்துரு)
நீர்வேலி வடக்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா இரத்தினேஸ்வரன் 10.07.2012 செவ்வாய்க்;கிழமை அன்று காலமானார். அன்னார் நடராசா, காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புமகனும், காலஞ்சென்ற சிங்கராசா புவனேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும் விக்னேஸ்வரி வவா அவர்களின் அன்புக்கணவரும் ஆவார். அன்னார் அனோராஜ் (நெல்சன் லேணர்ஸ், கச்சேரி), விமல்ராஜ்(ருளுயு), யாமினி(யாழ்ஃஇந்து மகளிர் கல்லூரி மாணவி) ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார். மல்லிகாதேவி(கனடா), சாரதாதேவி(நீர்வேலி), இராசேஸ்வரன்(பிரான்ஸ்), சந்திராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரனும் லிங்கேஸ்வரி(புத்தளம்), ரவிச்சந்திரன்(இத்தாலி), வரதேஸ்வரி(உரும்பிராய்), மங்களேஸ்வரி(இத்தாலி), வத்சலா(சுண்டுக்குளி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை புதன்கிழமை 11.07.2012 காலை 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக சீயாக்காடு மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நீர்வேலி வடக்கு, தகவல்
நீர்வேலி (மாசுவன் சந்தி) குடும்பத்தினர்