
ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னன் நடராசா நேற்று (25.03.2012) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னன் சிவகாமி தம்பதியரின் அன்பு மகனும் இராசமலர் (முகாமைத்துவ உதவியாளர் வலி.கிழக்கு தென்பகுதி நீர்வேலி ப.நோ.கூ.சங்கம்) அவர்களின் பாசமிகு கணவனும் தனுசியா (விபுலானந்தா நுண்கலைப் பீடம் கிழக்கு பல்கலைக்கழகம்), அனுசியா (க.பொ.த உயர்தரம், வர்த்தகப் பிரிவு யா/ நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி), கௌசிகா (மாணவி யா/ நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் நாகம்மா, இராசம்மா, தவராசா (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (25.03.2012) ஞாயிற்றுக்கிழமை நீர்வேலியில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றன.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : ந.இராசமலர் (மனைவி)
தொடர்புகளுக்கு
ந.இராசமலர் (மனைவி) - கந்தசாமி கோயிலடி.