
இறப்பு 2011-11-02
பிறந்த இடம்:தையிட்டி வாழ்ந்த இடம்: நீர்வேலி
தையிட்டியைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் செல்வநாயகி 02.11.2011 புதன்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதியரின் மகளும் அரிய குட்டி சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் மருமளும் காலஞ்சென்ற துரைசிங்கத்தின் மனை வியும் பிரதீபா, காலஞ்சென்ற தயாபரன் மற்றும் ரமேஸ் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயும் அசோகமலரின் (கனடா) மாமியும், சுவர்மன், வர்கிவி (கனடா) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.11.2011) ஞாயிற்றுக் கிழமை மு.ப 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :து.பிரதீபா (மகள்)
தொடர்புகளுக்கு:
து.பிரதீபா (மகள்) - நீர்வேலி வடக்கு, நீர்வேலி. ,