Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: செல்லையா சிவசுப்பிரமணியம்



செல்லையா சிவசுப்பிரமணியம்
இறப்பு: 2011-07-11



நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவசுப்பிரமணியம் நேற்று (11.07.2011) திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா பார்வதிப்பிள்ளை தம்பதியரின் மகனும், காலஞ்சென்ற சேனாதிராசாவின் சகோதரனும், காலஞ்சென்ற பார்வதிப் பிள்ளையின் அன்புக் கணவரும், மங்களேஸ்வரன் (ஐயாத்தம்பி) கௌரிதேவி, சவுந்தலாதேவி, காலஞ்சென்றவர்களான சுசீலாதேவி, ஜெயதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்வராசா, செல்வரத்தினம், விமலாதேவி ஆகியோரின் மாமனும், கஜதீபன், செந்தீபன், கார்த்தீபன், பங்குஷா, கிந்துஜன், முகுந்தன், ஸ்ரீகாந்தன், சரண்ஞா, லாவன்யா, சதுர்த்திகா, கவிதா, சாரங்கா ஆகியோரின் பேரனும் தர்ணிகா, சதுர்த்திகன், கபிஷா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.07.2011) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி சீயாக்காட்டு இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப் படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

குடும்பத்தினர் - நீர்வேலி வடக்கு, நீர்வேலி. ,

Posted on 14 Jul 2011 by Admin
Content Management Powered by CuteNews