Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: செல்லையா நடேசன்
பிறந்த இடம்:கோப்பாய்
வாழ்ந்த இடம்:நீர்வேலி வடக்கு



செல்லையா நடேசன்(முன்னாள் களஞ்சியப் பொறுப்பாளர், நீர்வேலி ப.நோ.கூ. சங்கம்)




கோப்பாயை பிறப்பிடமாகவும் இராச வீதி நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா நடேசன் (22.03.2011) மாலை சிவபதம் அடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு புதல்வரும் காலஞ்சென்றவர்களான இராமுப் பிள்ளை அன்னபூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும் சரஸ்வதியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற குமரேசன் மற்றும் மகேஸ்வரன் (கடற்றொழில் பரிசோதகர், கடற்றொழில் திணைக்களம், யாழ்ப்பாணம்.) இராமரூபன் (யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட விரிவுரையாளர்) ஆகியோரின் பாசமிகுத் தந்தையும் சிவசிறியின் அன்பு மாமனும் ஹிசாலி,பிரகவி, பிரகதி ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற மார்க்கண்டு மற்றும் மகேஸ்வரி கார்த்திகேசு புவனேஸ்வரி காலஞ்சென்ற மயில்வாகனம் ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.03.2011) புதன்கிழமை பிற்பகல் 3மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி சியாக்காடு இந்து மாயனத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல் :மகேஸ்வரன் (மகன்).

தொடர்புகளுக்கு:
மகேஸ்வரன் (மகன்). - இராச வீதி, நீர்வேலி வடக்கு, நீர்வேலி. ,

Posted on 27 Mar 2011 by Admin
Content Management Powered by CuteNews