இராமலிங்கம் கதிர்காமநாதன் (நாதன் சாரதி)
இறப்பு: 2011-01-30
பிறந்த இடம்: நீர்வேலி வாழ்ந்த இடம்: நீர்வேலி
சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கதிர்காமநாதன் (நாதன் சாரதி) 30.01.2011 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் ஆச்சிக் குட்டி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற பூமணி மற்றும் கணேசன் (டோகா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதியரின் மருமகனும் நாகேஸ்வரியின் அன்புக் கணவரும் மகேஸ்வரி காலஞ்சென்ற ஆனந்தகுமரன் (சூட்டி) மற்றும் ஞானேஸ்வரி, விமலேஸ்வரி, ராம்குமார் (கனடா) ஆகியோ ரின் அன்புத் தந்தையும் மனோகரன் பரமேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் மாமனும் றமணன், மயூரன், சௌமியா, சரண்யா,அபினயா,காயத்திரி, டினுஜா, ஐஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் சர்மிலி, சுகன்யா,சுகந்தராஜ் காலஞ்சென்ற வதனமதன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (01.02.2011) செவ்வாய்க்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காகப் புத்தூர் மேற்கு கிந்துசிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப் படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலி.