திரு ராசன் குணரத்தினம்
தோற்றம் : 10 பெப்ரவரி 1943 *** மறைவு : 24 சனவரி 2011
யாழ் - சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராசன் குணரத்தினம் அவர்கள் 24-01-2011 திகட்கிழமை அன்று சிறுப்பிட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ராசன் பொன்னம்மா தம்பதியினரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா - அன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
கேதீஸ்வரன்(கேதீஸ் - லண்டன்), கஜேந்திரன்(கஜன் - இலங்கை), தவரூபன்(ரூபன் - ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அதுஷன் அவர்களின் அன்பு அப்பப்பாவும்,
சத்தியகலா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நற்குணராசம்மா, காலஞ்சென்ற நவரட்ணம் மற்றும் தங்கம்மா(அன்ரா - சிறுப்பிட்டி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
செல்வரட்ணம்(ஓய்வுபெற்ற ஆசிரியர் - நடராஜலிங்கம் வித்தியாலயம் - சிறுப்பிட்டி),
விசாகநாதன்(சிறுப்பிட்டி) மற்றும் காலஞ்சென்ற யோகாம்பிகை மற்றும் பஞ்சநாதன்(கனடா - ஸ்காபறோ), கமலேஸ்வரி(கனடா - ஸ்காபறோ), மகேஸ்வரி(நீர்வேலி), புவனேஸ்வரி(நீர்வேலி) மற்றும் காலஞ்சென்ற விக்கினேஸ்வரி, மற்றும் மகேஸ்வரி(கனடா - ஸ்காபறோ) ஆகியோரின் மைத்துணரும்,
கிருஸ்ணபிள்ளை(நீர்வேலி), கந்தசாமி(கனடா - ஸ்காபறோ) மற்றும் காலஞ்சென்ற பரராஜசிங்கம், காலஞ்சென்ற வைரவநாதன் ஆகியோரின் சகலனும் அன்பு ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் 26-01-2011 புதன்கிழமை இராசவீதி சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தகனக்கிரிகைகளுக்காக சிறுப்பிடடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
தவரூபன்(மகன்), கஜன்(மகன்), கேதீஸ்(மகன்)
தொடர்புகளுக்கு
தவரூபன்(மகன்) - இலங்கை
தொலைபேசி: +94776136293
கேதீஸ்(மகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447885568766
கஜன்(மகன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94777148161