Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: காராளசிங்கம் வரதன்
இடம்: நீர்வேலி




மறைவு : 06.11.2010

காராளசிங்கம் வரதன்
(உரிமையாளர், மாயா பதிப்பகம்)
நீர்வேலி, மாசிவனைப் பிறப்பிடமாகவும் வசிப் பிடமாகவும் கொண்ட காராளசிங்கம் வரதன் 06.11.2010 அன்று அகாலமரணமானார்.
அன்னார் காராளசிங்கம் நாகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும் சுஜிதாவின் அன்புக் கணவரும் ராதிகா, கௌரீசன் (வர்த் தகப் பிரிவு, இறுதி வருட மாணவன், யாழ்.பல்கலைக்கழகம்), பிரகாஸ் (2ஆம் வருடம், முகிழ்நிலை ஆசிரியர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோத ரனும் கிருபை நாதனின் (கட்டார்) மைத்துனரும் R.S.சிவராசா (முன் னாள் சுகா தார ஊழியர், யாழ்.போதனா வைத்தியசாலை) ரதிதேவி (பரி சாரகர், ஆதார வைத்தியசாலை, மந்திகை) தம்பதியரின் அன்பு மரு மகனும் சுஜாதா (ஹொலண்ட்), சுபாஜினி, காலஞ்சென்ற சியாமளா மற்றும் சுஜீவன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.11.2010) செவ் வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.
மாசிவன்,
நீர்வேலி மேற்கு, நீர்வேலி.

Posted on 14 Nov 2010 by Admin
Content Management Powered by CuteNews