|
Obituaries - மரண அறிவித்தல்
» மரண அறிவித்தல்: பெயர்:தம்பையா காசிநாதர்
பெயர்:தம்பையா காசிநாதர் இடம்: நீர்வேலி இறப்பு : 18 July 2010

தம்பையா காசிநாதர் (முன்னாள் முகாமையாளர், தலைவர், வாழைக்குலை சங்கம், நீர்வேலி) சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலியைப் பிறப் பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா காசிநாதர் நேற்று( 18.07.2010) ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா இளையபிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற ஆச்சிக்குட்டி யின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற திருமதி தம்பிமுத்து சேதுப்பிள்ளையின் அன்புச் சகோதரனும் இராமராசா, இராமநாதன் (லண்டன்), நாகலிங்கம் (சுவிஸ்), காலஞ் சென்ற குலசிங்கம் மற்றும் செந்தில் மதி (ஆசிரியர், சிறுப்பிட்டி இ.த.க. பாடசாலை) ஆகியோரின் தந்தையும் பரமேஸ்வரி, விஜயலட்சுமி, ஜெயக்குமாரி (லண்டன்), புவனேஸ்வரி, சுரேந்திரன் ஆகியோரின் மாமனாரும் அருந்ததி சிவபரன், யாழினி பாலமோகன் (கனடா), தர்சினி, மயூரன், விக்கினேஸ்வரன், சர்வேஸ்வரன், துர்க்கா (லண்டன்), கர்ணன் தம்பையா (லண்டன்), நித்திலா சபேசன், நிஷானி முகுந்தன் (லண்டன்), அனுஷன் (லண்டன்), ஜாதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் யஷ்மிகன் (கனடா), ஜெனிஷா (கனடா), சியானுஜா, தீதிகா (லண்டன்) ஆகியோரின் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.07.2010) திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக சிறுப்பிட்டி இந்து மயானத்துக்கு பி.ப. 2 மணிக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர். சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி. (101168)
Posted on 16 Aug 2010 by Admin
|