|
Obituaries - மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்: தம்பையா காராளசிங்கம்
பெயர்: தம்பையா காராளசிங்கம் இடம்: நீர்வேலி இறப்பு : 13 May 2010
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா காராளசிங்கம் 01.06.2010 செவ்வாய்க் கிழமை மாலை 6 மணியளவில் காலமாகி விட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையாமுத்தம்மா தம்பதியரின் மகனும் செல்வமலரின் கணவரும் காலஞ்சென்ற தியாகராசா மற்றும் இராசசிங்கம், சம்பந்தர், இந்திராணி, காலஞ் சென்ற மனோன்மணி ஆகியோரது சகோத ரனும் முருகதாஸ் (ஜேர்மனி), சுனித்தா (கனடா), சிறிதேவி (கொலன்ட்), பிரதீபா (லண்டன்) ஆகியோரது பாசமிகு தந்தையும் பிரிசாந்தி (ஜேர்மனி), சிறி தரன் (கனடா), ரகு (கொலன்ட்), சுதாகரன் (லண்டன்) ஆகி யோரது மாமனாரும் அபினேஷ், ரஜானி (ஜேர்மனி), சௌமியா, சஞ்சீவி (கனடா), சாருஜா, தனீஷ் (கொலன்ட்), சிரேகா (லண்டன்) ஆகியோரது பேரனும் கமலவேணியம்மா, புஸ்பராணி, பாலசுப்பிரமணியம், பொற்கொடி ஆகியோரது மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்பு அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள். நீர்வேலி தெற்கு, நீர்வேலி.
Posted on 06 Jun 2010 by Admin
|