Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல் - இராசையா செல்வநாயகம்


இறப்பு : 28 ஏப்ரல் 2010
இடம்: நீர்வேலி மேற்கு






நீர்வேலி, கரந்தனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்வநாயகம் நேற்று (28.04.2010) புதன் கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா சிவபாக்கியம் தம்பதியினரின் புதல்வனும், தாமோதரம்பிள்ளை செல்லம்மா (வரணி) தம்ப தியினரின் அருமை மருமகனும், சிவரூபராணியின் அன்புக் கணவரும், லிதாபரன், லிதாவரன் (கனகரத்தினம் மத்திய மகா வித்தியா லயம்), தயாகரன் (யா/இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்வரத்தினம், தங்கலட்சுமி (கனடா), ராஜேஸ்வரி, செல்வராணி, செல்வமலர் (கனடா), இந்திராணி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், நாகேந்திரம் (கனடா), பத்மநாதன், ஸ்ரீபாலன், கந்தசாமி (கனடா), ஜெயராஜ் (கனடா), சரோஜினிதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.04.2010) வியாழக் கிழமை நீர்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 4 மணியளவில் நீர்வேலி சீயாக்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: மனைவி, பிள்ளைகள்.
கரந்தன்,
நீர்வேலி மேற்கு.

Posted on 01 May 2010 by Admin
Content Management Powered by CuteNews