Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: இரத்தினம் சந்திரகுமாரன்


இறப்பு : 22 ஏப்ரல் 2010
இடம்: நீர்வேலி





நீர்வேலி, இராசவீதி, கரந்தன் சந்தியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சந்திரகுமாரன் 22.04.2010 வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற இரத்தினம்பாக் கியம் தம்பதிகளின் ஏக புதல்வனும் புவ னேஸ்வரி (இளைப்பாறிய பரிசாரகர், யாழ்.போதனா வைத்திய சாலை), செல்வராணி, செல்வமணி, காலஞ்சென்ற செல்வமலர் ஆகியோரின் அருமைச் சகோதரனும், கணேசு (இளைப்பாறிய பரிசாரகர், யாழ்.போதனா வைத்தியசாலை), சின்னத்தம்பி, பசுபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.04.2010) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: ச.கணேஸ்
இராச வீதி, கரந்தன் சந்தி,
நீர்வேலி.

Posted on 26 Apr 2010 by Admin
Content Management Powered by CuteNews