|
முதலாம் ஆண்டுநினைவலைகள் பெயர்: நவரத்தினம் சிவபுனிதம் இராமநாதன் செல்வமூர்த்தி
பெயர்: நவரத்தினம் சிவபுனிதம் இராமநாதன் செல்வமூர்த்தி இடம்: நீர்வேலி

Posted on 16 Aug 2010 by Admin
31 ஆம் நாள் நினைவும் நன்றி நவிலலும் பெயர்: சிவானந்த குருக்கள் சர்வேஸ்வரசர்மா
பெயர்: சிவானந்த குருக்கள் சர்வேஸ்வரசர்மா இடம்: நீர்வேலி

31 ஆம் நாள் நினைவும் நன்றி நவிலலும் சிவானந்த குருக்கள் சர்வேஸ்வரசர்மா பிறப்பு: 20.01.1928 இறப்பு: 16.06.2010 வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறை தெய்வத்துடன் ஐக்கியமாகி விட்ட என் தெய்வம் சிவானந்தகுருக்கள் சர்வேஸ்வரசர்மா அவர்கள் 16.06.2010 அன்று எம்மை விட்டு பிரிந்தசெய்தி கேட்டவுடன் எம் இல்லத் திற்கு வந்து துயரத்தில் கலந்துகொண்டு ஆறுதல் கூறிய அன்பு நெஞ்சங் கள் அன்னாரின் மாணவ மணிகள், இறுதி நிகழ்வில் பல வழிகளிலும் கலந்துகொண்டவர்கள், இரங்கலுரையாற்றிய பெரியோர்கள், கடிதங்கள் மூலமும் தொலைபேசி மூலமும் என்னை தொடர்புகொண்டு அனுதாபம் தெரிவித்தவர்கள், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரம், தமது உணர்வு பூர்வமான அஞ்சலி தெரிவித்தவர்கள் மற்றும் ஐயாவின் இறுதிக் காலங்களில் இயலாமலிருந்தபோது இல்லத்திற்கு நேரடியாக வந்து அவரை அன்பு டன் பார்வையிட்டு மருத்துவ உதவிகளையளித்த வைத்தியர்கள், மருத் துவமனையில் பல வழிகளிலும் உதவி செய்தவர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மேலும் அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை கிரியைகளில் கலந்துகொண்ட அனைத்து உடன் பிறவாத உறவுகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Posted on 16 Aug 2010 by Admin
31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் வீட்டுக்கிருத்திய அழைப்பும்: பெயர்: அமரர் தம்பிப்பிள்ளை ஐயாத்துரை
பெயர்: அமரர் தம்பிப்பிள்ளை ஐயாத்துரை இடம்: நீர்வேலி

தோற்றம்: 14*09*1929 மறைவு: 17*05*2010 அமரர் தம்பிப்பிள்ளை ஐயாத்துரை (வீரபத்திரர் கோயில் பூசகர்) மாதமொன்று போனாலும் மாறவில்லை எம் துயர், உங்கள் வண்ணமுகம் காணாமல் திங்கள் ஒன்று மறைந்ததுவோ, அப்பா என்று ஆசையாக இனி நாம் யாரை அழைப்பது? கடந்த 17.05.2010 அன்று சிவபதம் அடைந்த எமதுகுடும்பத்தலைவரின் மறைவுச் செய்திகேட்டு நேரில் வந்தும் தொலைபேசிமூலமும் அனுதாபம் தெரிவித்தும், இறுதிச்சடங்கில் அஞ்சலி செலுத்தி ஒத்துழைப்பு வழங்கியும் உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள் கோப்பாய் பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் கண்ணீர் பிரசுரங்களை வெளியிட்டவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு, நாளை (15.06.2010)செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள். இராச வீதி, நீர்வேலி வடக்கு, நீர்வேலி.
தகவல்: ஐ.சிவானந்தம், கிராம உத்தியோகத்தர், வாதரவத்தை.
Posted on 18 Jun 2010 by Admin
31 ஆம் நாள் நினைவஞ்சலியும் வீட்டுக்கிருத்திய அழைப்பும்: அமரர் இராசையா செல்வநாயகம்
பெயர்: அமரர் இராசையா செல்வநாயகம் இடம்: நீர்வேலி மேற்கு.

மண்ணுலகம்: 26-09-1947 விண்ணுலகம்: 28-04-2010
கடந்த 28.04.2010 அன்று இறைபதமடைந்த எமது குல விளக்கு இராசையா செல்வநாயகம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமும் அனுதாபம் தெரிவித்தவர் களுக்கும் இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இன்று (28.05.2010) வெள்ளிக்கிழமை எமது இல்லத்தில் நடைபெறும். இந்நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். (இதனைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளவும்) இவரின் பிரிவால் துயருறும்: குடும்பத்தினர். கரந்தன், நீர்வேலி மேற்கு. T.P.: 021 3735500
Posted on 06 Jun 2010 by Admin
31ஆம் நாள் நினைவஞ்சலி: அமரர் இரத்தினம் சத்தியகுமார்
பெயர்: அமரர் இரத்தினம் சத்தியகுமார் இடம்: நீர்வேலி.

Posted on 06 Jun 2010 by Admin
<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 Next >>
|