முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் சிவபாக்கியம் பாலசுப்பிரமணியம்
பெயர்: அமரர் சிவபாக்கியம் பாலசுப்பிரமணியம்
இடம்: நீர்வேலி
மலர்வு 16-08-1925 ---- உதிர்வு 18-04-2009

நீர்வேலி ஸ்ரீமான் அத்தியார் அருணாசலம் அவர்களின் மருமகள்
அமரர் சிவபாக்கியம் பாலசுப்பிரமணியம் (பாலாரீச்சர்)
ஆகிவிட்டது ஓராண்டு ஆறவில்லையே எம்துயரம்
உங்கள் பிரிவுத் துயரை எவ்வாறு தாங்குவது
வந்தொரு தடவை பார்க்க மாட்டீர்களா?

தகவல்: மக்கள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள் நீர்வேலி.

Posted on 06 May 2010 by Admin
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் கிருஷ்ணபிள்ளை நித்தியானந்தன்


அமரர் கிருஷ்ணபிள்ளை நித்தியானந்தன்
இடம்: நீர்வேலிபிறப்பு 01*11*1958 இறப்பு 14*05*2009

அமரர் கிருஷ்ணபிள்ளை நித்தியானந்தன்
திதி: பஞ்சமி
எங்களை இடைநடுவில் தவிக்கவிட்டுச் சென்று
ஆண்டொன்று ஆனதுவோ அப்பா!
உங்கள் பிரிவுத் துயர் தந்த ஆறாத காயங்கள்
என்றென்றும் எம்மனதில் ஓயாத அலைகளாய்
பாய்ந்த வண்ணம் உள்ளது அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
மனைவி, பிள்ளைகள்.
நீர்வேலி வடக்கு, நீர்வேலி.Posted on 04 May 2010 by Admin
4 ஆம் ஆண்டு நினைவலைகள் - கணபதிப்பிள்ளை கலாமதி

கணபதிப்பிள்ளை கலாமதி
இடம்: நீர்வேலி
Posted on 04 May 2010 by Admin
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் ரூபி வேலாயுதபிள்ளை

அமரர் ரூபி வேலாயுதபிள்ளை
இடம்: நீர்வேலிபிறப்பு: 25-09-1946 இறப்பு: 01-05-2009

அமரர் ரூபி வேலாயுதபிள்ளை
(தாதிய உத்தியோகத்தர், யாழ்.போதனா வைத்தியசாலை)

எம்மிரு விழிகளிலும் கண்ணீர் ஓயவில்லை
பன்னிரு திங்கள் பறந்தனவே நொடிப் பொழுதில்
கண்ணின் மணிபோல எம்மைக் காத்த அம்மாவே!
என்றென்றும் நின் நினைவு எம்முடனே.


தகவல்: கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். வேல் வைத்தியசாலை,
நீர்வேலி.

Posted on 30 Apr 2010 by Admin
1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் சுப்பிரமணியம் உதயதாஸ்
அமரர் சுப்பிரமணியம் உதயதாஸ்
(பார்புகழன்)
தோற்றம் : 4 யூலை 1973 - மறைவு : 10 மே 2009திதி : 29 ஏப்ரல் 2010நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சுப்பிரமணியம் உதயதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இவர், சுப்பிரமணியம், காலஞ்சென்ற அரியமலர் தம்பதிகளின் அன்புமகனும்,

கெளசலாவின் அன்புக்கணவரும்,

வசிகரனின் பாசமிகு தந்தையும்,

குகதாசனின் அன்புச் சகோதரனும், தயாநிதியின் மைத்துனனும், ஜன்சன், உதிரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

ஆண்டு தான் ஒன்று ஆனதுவோ
உன் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டு
நீங்கவில்லை உதயா..!
பாசம் என்னும் பிணைப்பிலே இணைந்திருந்த
எம்மைவிட்டு எங்குதான் சென்றாயோ

உன் சிரித்த முகமும் சிந்தனையான பேச்சும்
எம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை
நீ கொண்ட இலட்சியமும்
இல்லறம் மீது கொண்ட பாசமும்
உன்முன் வியாபித்து இருக்க
எங்குதான் சென்றுவிட்டாய் உதயா...?

காத்திருக்கின்றோம் விழிகளில் நீர்வடிய
வருவாயா எம்மைத் தேடி..?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரரத்திக்கின்றோம்
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..!


தகவல்: உங்கள் பிரிவை தாங்கமுடியாமல் தவிக்கும், மனைவி, பிள்ளைகள், சகோதரன், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்

Posted on 30 Apr 2010 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 Next >>