யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லைநாதர் சண்முகதாஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலச்சுழற்சியில் மூன்றாண்டு
கடந்து போனாலும் இன்னும்
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம்
நீங்கள் இல்லாத துயரம்
வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை!
மூன்றாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ என்பார்கள்
அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால்
எங்கள் மனதிற்கு தெரியவில்லையே!
ஆலமரமாய் நின்று
எம்மை அரவணைத்தீர்கள்
கல்விச் செல்வத்தால்
எம்மை நாடறிய வைத்தீர்கள்
எங்கள் குடும்ப விளக்காய்
எமக்கு நல்வழி காட்டி
உறுதுணையாக இருந்த நீங்கள்
இப்போது எம்முடன் இல்லை
உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும்
இறைவனை வேண்டி நிற்கின்றோம்...
தகவல்: குடும்பத்தினர்