11ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் இரத்தினம் தர்மானந்தராஐா

அமரர் இரத்தினம் தர்மானந்தராஐா
வயது 68
கலட்டி, Sri Lanka (பிறந்த இடம்), நீர்வேலி, Sri Lanka, சவுதி அரேபியா, Saudi Arabia, Ilford, United Kingdom
தோற்றம் 09 OCT 1945***மறைவு 08 FEB 2014

யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, சவுதி அரேபியா, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தர்மானந்தராஜா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.  

என் அருமை அண்ணாவே
 எம்மைவிட்டு எங்கு சென்றீரோ ...
 வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து 11 ஆண்டு ஆனாலும்
 ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அண்ணா...

ஆண்டவன் படைப்பினை ஆழமாய்
 பார்த்தாலும்! பாசமாய் உங்களின்
 பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின் புன்னகையை
 ரசிக்கின்றோம்!

எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து எம்மை
வழிநடத்திய அந்த நாட்கள் எம்
நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே
 அண்ணா...

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
 உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....

 உங்கள் ஆத்மா சாந்தியடய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: சுகுனானந்தராஜா மற்றும் குடும்பத்தினர்

Posted on 09 Feb 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews