31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்: திருமதி பகீரதி ஞானகாந்தன்

திருமதி பகீரதி ஞானகாந்தன்
Bsc, Msc (Hons - Microbiology)
வயது 48
ஏழாலை தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்), கொழும்பு, Sri Lanka
தோற்றம் 05 DEC 1975***மறைவு 29 OCT 2024


யாழ். ஏழாலை தெற்கு விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பகீரதி ஞானகாந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாட்கள் எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்

கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லையே!

உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும்
உறைந்திருக்கும் அம்மா!!

உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனை வேண்டி நிற்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ஆம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வு, எதிர்வரும் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்து, தொடர்ந்து இடம்பெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்: "சரஸ்வதி மண்டபம்" இல. 75, லோறன்ஸ் வீதி, கொழும்பு 04

இங்ஙனம்,
கணவர், சகோதரர்கள்

தொடர்புகளுக்கு

Dr. ஞானகாந்தன் - கணவர் 
Contact Request Details 

ஜனா - சகோதரர் 
Contact Request Details 

லவன் - சகோதரர்
Contact Request Details 

Posted on 03 Dec 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews