நீர்வேலி தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்), யாழ்ப்பாணம், Sri Lanka, கொழும்பு, Sri Lanka
யாழ். நீர்வேலி தெற்கு கந்த சுவாமி கோயில் அடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளம்பலம் குமாரசுவாமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ
ஆண்டு இரண்டு ஆயிரம் ஆண்டுகளானாலும்
நாம் வாழும் வரை உம் நினைவலைகள் எம்மிலே வாழும்
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
மானிட வாழ்வென்றால் நிலையாமையே ஆனாலும்
தங்களின் அறவாழ்வும் இன் சொல்லும் நம்மிடமும் பிறரிடமும்
நீங்காத நினைவுகளாய் நீண்டிருக்கும்
என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்: குடும்பத்தினர்