நினைவஞ்சலி: அமரர் இளையதம்பி இரத்தினசிங்கம், அமரர் யோகாமலர் இரத்தினசிங்கம்
அமரர் இளையதம்பி இரத்தினசிங்கம், அமரர் யோகாமலர் இரத்தினசிங்கம்
மறைவு 28 SEP 2021
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்), நீர்வேலி, Sri Lanka

அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் (மம்மி): 
பிறப்பு: 31 OCT 1947
இறப்பு: 30 AUG 2012

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகமலர் இரத்தினசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள்   
 பன்னிரண்டு கடந்தாலும்
 ஓயவில்லை உங்களின்
நினைவுகள் அகலவில்லை
 அம்மாவின் அன்பு முகம்...

உலகமும் நிஜமில்லை, உறவுகளும்
 நியமில்லை என்றுணர்ந்தோம்
 உங்களின் இழப்பால்!
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்!

என்ன செய்வது
எம் மனம் ஏங்குகிறது!
 அழுத விழிகளுக்கு
ஆறுதல் காட்ட ஒரு முறையாவது
 வாங்க அம்மா உங்கள் முகம் காண!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அமரர் இளையதம்பி இரத்தினசிங்கம்(பப்பா- ஆச்சாரியார்):
பிறப்பு 28 DEC 1938
இறப்பு 28 SEP 2021 

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி இரத்தினசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு மூன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை!!!

எம்மால் இப் பூமியில் உங்களை
நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்..

குடும்பத்தின் குல விளக்கே
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே

எண்ணிய பொழுதெல்லாம் கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால், வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம், வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்!!!..

உங்களை ஒரு போதும் மறவாமல் வணங்குகின்றோம்.
இறைவன் திருவடியில் சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்....

தகவல்: குடும்பத்தினர்

Posted on 28 Sep 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews