யாழ். காளியானை புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கு மாசுவனை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி செல்வராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
எமது குடும்பத்தின் ஒளிவிளக்கு அமரர் இளையதம்பி செல்வராசா அவர்களின் சிவபதப்பேறு குறித்த 31ம்நாள் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 11.02.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 13.02.2024 செவ்வாய்க்கிழமை பகல் 11.00 மணியளவிலும் அன்னாரது இல்லத்தில் நடைபெற இருப்பதால், அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடரந்து நடைபெறும் மதியஉணவு நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:-
மாசிவன்,
நீர்வேலி மேற்கு,
நீர்வேலி
இங்ஙனம்,
குடும்பத்தினர்