கலட்டி, Sri Lanka (பிறந்த இடம்), நீர்வேலி, Sri Lanka, சவுதி அரேபியா, Saudi Arabia, Ilford, United Kingdom
யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, சவுதி அரேபியா, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தர்மானந்தராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும் எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால் வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
"காலங்கள் கடந்து போகும் ஆனால் கண்மணியே அப்பா
உன் நினைவுகள் மட்டும் காலம்தனை வென்று
எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!
இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்