யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு வேதநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பாசத்தின் உறைவிடமே
பண்பின் ஒளிவிளக்கே
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த
உறவுகளை கைவிட்டு சென்றதேனோ
பிரிவால் வாடிநிற்கின்ற உள்ளங்கள்
தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே
நின் உறவின் அடிதேடி துடிக்கின்றதே
மண்விட்டு மறைந்து நீங்கள்
விண்நோக்கி சென்றாலும்
கண்விட்டு மறையாமல்
கனகாலம் இருப்பீர்கள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்புத் தந்தையே இறைவா இவ்வுலக வாழ்வை நிறைவு செய்து உமது இன்ப சந்நிதானம் வந்துள்ள எமது குடும்பத்தலைவன் இராயப்பு வேதநாயகம் அவர்களின் நம்பிக்கை எங்கள் கிறித்தவ வாழ்வுக்கும் உறுதுணையாக அமைய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை இரந்து மன்றாடுகின்றோம்.
நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன் (தி.பா.23:6)
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 29.07.2023 சனிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் யாழ் புனித மரியன்னை பேராயத்தில் நடைபெறும் இரங்கல் திருப்பலியில் கலந்து கொள்ளுமாறும், அதனைத் தொடர்ந்து அன்னாரது இல்லத்தில் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:-
நீர்வேலி தெற்கு, நீர்வேலி,
யாழ்ப்பாணம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்