யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த தெய்வேந்திரன் மார்க்கண்டு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-07-2023
ஆண்டு ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்பு முகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள் அப்பா!
அப்பா என்ற வலிமையை நீங்கள் இல்லாத
காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள் அப்பா!
உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டு ஒன்று கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
எங்கள் நெஞ்சில் இருந்துகொண்டே இருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்