யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் சின்னத்தம்பி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!
உங்கள் இறுதி மூச்சு நின்றோட
இன்றளவும் நம்ப முடியவில்லை
நீங்கள் இல்லாத வாழ்க்கையை
ஆண்டுகள் இரண்டான போதும் வார்த்தைகள்
மெளனமாகி இதயங்கள் காயமாகி விழியோரம்
ஈரமாகி செல்கிறது நாட்கள் தினமும்
நிஜமான உங்களை எங்கள் அருகில் வைத்து
வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர் !
உங்கள் நினைவுகளை சுமந்து நிற்கும்
குடும்பத்தினர்....!
தகவல்: குடும்பத்தினர்