யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Boston ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுரேந்திரா துரைரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-06-2023
ஓராண்டு ஆனது அப்பா
எம்மையெல்லாம் விட்டு நீர் பிரிந்து!
மேய்ப்பன் இல்லாத மந்தையாய்
நாம் இங்கு!
வாழ்க்கைப் பயணத்தில்
வலிக்குமேல் வலி சுமந்து
வலி தந்த காயங்களுடன்
ஒவ்வொரு நாளும் இழப்பின் வலியை
புரிந்து வாழ்கின்றோம்.
என்றாலும் விண்ணிருந்து எமக்கு
நல்வழி காட்டுவீர் என்று
நாளும் பொழுதும் உம்
நிழல் நாடி நிற்கின்றோம்.
உங்கள் அன்பும் அரவணைப்பும்
என்றும் எமை காத்து நிற்கும்.
எங்கள் எல்லோரது உள்ளத்திலும்
தெய்வமாய் என்றும் வீற்றிருப்பீர்கள்!
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
ஆண்டவனை வேண்டுகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்