இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே எங்கள்
வீட்டின் ஆலமரமாகவும் அதில்
நாங்கள் விழுதுகளாகவும் வர
ஆண்டவனை வேண்டுகிறோம்!
எம் உயிருக்கும் மேலானவரே
உம் நினைவோடு நீர் மறைந்து
போன பின்பும் உம் நினைவு
சுமந்த நெஞ்சமெல்லாம் கண்ணீராய்
கரைந்து பேராறாய் பெருகுதய்யா மடை திறந்து!
உம் பாசப்பிணைப்பினால்
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய்
வேண்டுகின்றோம்!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இலல்லத்தில் நடைபெறவிருக்கும் மதியபோசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்