யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காங்கேசு சிவராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டு ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன்
தன்னோடும் செம்மையாய் வாழ்ந்த
அப்பா விதித்ததோர் விதியதால்
விண்ணகம் சென்றதைப் பொறுத்திட
முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு
முகம் மறைந்தாலும் அழியாது
நினைவலைகள்! கண்முன்னே
வாழ்ந்த காலம் கனவாகிப்
போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்