ஸ்தபதி செல்லப்பா சிவரத்தினசிங்கம்
ஆச்சாரியார், மநுவிலாட சங்கிலித் தவண்டை ஆச்சாரிக் குருக்களின் மரபினனும், கலாலயா ஷேத்திரத்தின் கவின்நிறை சிற்பக் கலைஞனுமான சில்பகலா வித்தகன்
வயது 61
மயிலிட்டி, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சிவரத்தினசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 08-12-2021 புதன்கிழமை அன்று 09:00 மணியளவில் கீரிமலை கண்டகி புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக் கிருத்தியக்கிரியை 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும், 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெறவுள்ள ஆத்மசாந்திப் பிரார்த்தனையும், விருந்துபசாரமும் நிகழ்வில் தங்களையும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.
நிரந்தர முகவரி:-
கலாலயா,
மயிலிட்டி.
யாழ்ப்பாணம்.
தற்காலிக முகவரி:-
கதிர்காமர் கோவிலடி,
நீர்வேலி வடக்கு,
யாழ்ப்பாணம்.