36ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் EK சண்முகநாதன்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த EK சண்முகநாதன் அவர்களின் 36ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 04-12-2021

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
முப்பத்தாறு ஆண்டு ஆனாலும் அப்பா
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்

எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அப்பா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அப்பா!

பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உம் அன்பு மட்டுமே!

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்களை இவ்வளவு விரைவாக இழந்தததே
எங்கள் வாழ்வின் மிகப்பெரும் துயரம்!
தைரியம், கருணை, அறிவு நிறைந்தவரும்,
 மதிப்புமிக்க கல்வியாளருமான தங்கள் தாத்தாவை
எம் குழந்தைகள் அறிய வாய்ப்பில்லாமல் சென்றுவிட்டது.
அப்பா! நீங்கள் எங்கள் இதயங்களில்
நிறைந்திருக்கிறீர்கள்...
எங்கள் ஒவ்வாரு பிரார்த்தனையும்
உங்களின் ஆத்ம சாந்திக்கானதே!
நீங்கள் இல்லாத வெறுமையை
ஒவ்வொரு நாளும் உண்ர்கின்றோம்!

என்றும் உங்கள் அன்பான நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதரி குடும்பம், மைத்துனர் குடும்பம், மைத்துனி குடும்பம்...

தகவல்: குடும்பத்தினர்

Posted on 02 Dec 2021 by Admin
Content Management Powered by CuteNews