அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்: திரு இளையதம்பி இரத்தினசிங்கம் (பப்பா)
திரு இளையதம்பி இரத்தினசிங்கம் (பப்பா)
ஆச்சாரியார்
வயது 82
நீராவியடி, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka
பிறப்பு 28 DEC 1938***இறப்பு 28 SEP 2021

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி இரத்தினசிங்கம் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அழியாத அழகு அ(ப)ப்பா!..
அன்புக்கு இலக்கணமே பப்பா!
எம் மனதில்அழியாத ஓவியம் நீ அப்பா!
காலனின் கட்டளையில் அமைதியாய் போனாயோ?
கடல் கடந்து நாம் இங்கு கதறுகின்றோம் பாராயோ!
உன் இறுதிக் காலத்தில் உன்னருகில் நாம் இல்லை
உன் உயிர் பிரியும் போதும் உன் பக்கத்தில் நாம் இல்லை
உன் இறுதிக் கடமையிலும் கலக்காத பாவியானோம்
நம்ப முடியவில்லை பப்பா நீங்கள் உயிரோடு இல்லை என்று!
தாங்க முடியவில்லை நீங்கள் எமை விட்டுப் பிரிந்ததை மரணம்
இயற்கைதான் எனினும் நீங்கள் மரணிப்பீர்கள்
என்று நாம் எதிர்பார்க்கவேயில்லை பப்பா
உங்களுக்கு மட்டும் விதிவிலக்காகியிருக்கக்கூடாதா?
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எங்கள் முன் உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும்... 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 28-10-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.  

இங்ஙனம்,
குடும்பத்தினர்

Posted on 28 Oct 2021 by Neervely Admin1
Content Management Powered by CuteNews