அமரர் கனகசபை சின்னராசா
இளைப்பாறிய மாவட்ட முகாமையாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை-கிளிநொச்சி, யாழ்ப்பாணம், செயலாளர் - மயிலணி நலன்புரிச் சங்கம்
வயது 77
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) சுன்னாகம், Sri Lanka
மண்ணில் 30 MAR 1934***விண்ணில் 09 OCT 2011
நீர்வேலி வடக்கு, காமாட்சி அம்பாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், மயிலணியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை சின்னராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரூட்டி வளர்த்தவரை
உயிர் உள்ளவரை மறவோம்!
அன்பைப் பொழிந்து அறிவைத் தந்து
எம்மை இவ்வுலகில் பெருமையோடு
வாழ வைத்த எம் அன்புத் தந்தையே!
அணைக்கின்ற கைகளும்
அழகிய புன்னகையையும்
அன்பை சுமந்த இதயத்தையும்
ஆண்டவன் பறித்தது ஏன்….?
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை நெஞ்சம்
எல்லாம் வலிகளுடன் நிஜங்களைத் தேடுகின்றோம்
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள் நாம்
என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்