யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நடராஜா அவர்களின் 10 ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து கழிந்ததுவோ! எம்
ஆருயிர்த்தந்தை எமை விட்டு பிரிந்து
எல்லோருடனும் அன்புடனே பழகவே
எமக்கு வழிகாட்டினீர்கள் ஐயா
சிறப்பான வாழ்க்கை முறைகளை- எமக்கு
பயிற்றுவித்தீர்கள் ஐயா!
எம்மிடம் கோபம் வந்தபோதும்
இன்முகத்துடனேயே எமக்கு அறிவுரைதந்தீர்களே!
பெண் பிள்ளைகள் என கவலைகொள்ளாதே
எம் பெண் பிள்ளைகள் பொன் பிள்ளைகள்
என்று எம் அம்மாவை சாந்தப்படுத்தினீர்களே!
இன்பமோ துன்பமோ எதுவரினும்
எங்கள் ஐயா இருக்கிறாரே குடையாக
என இறுமாந்திருந்தோமே!
ஐயா எமக்கு மறுபிறப்பு என்று
ஒன்றிருந்தால் நீங்களே எமக்கு
திரும்பவும் தந்தையாக வர
இறைவன் பாதம் வேண்டி
நிற்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
கோகிலா(இலங்கை), கருணாநிதி(பிரான்ஸ்), லோகேஸ்வரி(கனடா), சர்வேஸ்வரி- கௌரி(சுவிஸ்), பிருந்தா(இலங்கை), சசிகாந்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீகாந்தநாதன், கமலக்கண்ணன், சசிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீஷ், நிருபா, சபேஷ், சுயந்தன், சந்தோஷ், தீபிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
தகவல்: குடும்பத்தினர்