41ம் நாள் நினைவஞ்சலி :அமரர் செல்வராசா சின்னத்தம்பி



அமரர் செல்வராசா சின்னத்தம்பி
இறந்த வயது 89
நீர்வேலி(பிறந்த இடம்)





யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா சின்னத்தம்பி அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலி.

41 நாள் சென்றாலும் எம் மனதை ஆற்றமுடியவில்லை
உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய இயலாமல் தவிக்கின்றோம்.


அன்று எங்கள் துன்பம் யாவும் நீங்க
பாசத்தின் பிறப்பிடமாய்,
பண்பின் உறைவிடமாய்,
வாழ்வின் வழிகாட்டியாய்
எம்முடனே எமக்காகவே
வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
கருணையின் வடிவமே!
பண்பின் சிகரமே!

உனது அன்பாலும்,
அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும்,
அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும்
அனைவரையும் கவர்ந்தவரே!

உற்றார், உறவினர்களிற்கு நற்பண்பை காட்டியதுடன்
உங்களை நம்பி நடப்பவர்களிற்கெல்லாம் எதையும்
செய்யத் துணிந்த கருணைக் கடலே!

உயிருக்கும் மேலானவரே!
உம் நினைவோடு நீர் மறைந்து போன பின்பும்
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து பேராராய்
மடை திறந்து பெருகுதய்யா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.



எங்கள் அன்புத்தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடி வந்தவர்களிற்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தவர்களிற்கும், எம் துயரில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் வில்லூன்றி புனித தீர்த்த மண்டபத்திலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள்(சவுண்டி) 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் பாடசாலையடி, நீர்வேலி மத்தி, நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகை தந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விக்னேஸ்வரமூர்த்தி - மகன்

Mobile : +94773847200

கந்தசாமி - மகன்

Mobile : +94776093760

ஆறுமுகதாசன் - மகன்

Mobile : +14372230268

ஜெயகாந்தன் - பேரன்

Mobile : +14168314608

தவமணிதேவி - மகள்

Mobile : +447474294178

செல்வராணி - மகள்

Mobile : +447860553092

இராஜேஸ்வரி - மகள்

Mobile : +491718037640

ஞானசௌந்தரி - மகள்

Mobile : +4741465753

Posted on 23 Apr 2020 by Admin
Content Management Powered by CuteNews