பிறப்பு : 10 ஏப்ரல் 1946 - இறப்பு : 1 ஓகஸ்ட் 2017
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் பாலசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
நிமிர்ந்த நடை நேரிய பார்வை
நேர்மையான உள்ளம்
நினைக்கின்றோம் உன்னை நித்தமும்
நினைவெல்லாம் உன் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்.
அன்னாரின் 1ம் ஆண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனை 22-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டுமுகவரி:
குறுக்கு வீதி,
நீர்வேலி வடக்கு,
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்