31ம் நாள் நினைவஞ்சலி: அமரர் செல்லையா சுப்பிரமணியம் (C.T.B மணியண்ணை- ராஜ்மணி பந்தல் சேவை)



பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: கனடா

தோற்றம் : 15 மே 1944 - மறைவு : 12 பெப்ரவரி 2018


யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா சுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

அன்று எங்களது துன்பம் நீக்க
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு
கூறும் ஆறுதல் வார்த்தைகளாலும்
அனைவரையும் கவர்ந்தீரே!

உற்றார் உறவினர்களிற்கு நற்பண்பை காட்டியதுடன்
உங்களை நம்பி நடப்பவர்களிற்கெல்லாம்
எதையும் செய்யத் துணிந்த கருணைக்கடலே!

உயிருக்கும் மேலானவரே உம் நினைவோடு
நீர் மறைந்து போனபின்பும்
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து பேராறாய்
பெருகுதய்யா மடைதிறந்து!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

எங்கள் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும், அயல் நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும், எம் துயரில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 12-03-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 14-03-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகை தந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இலங்கை
செல்லிடப்பேசி: +94772545370
பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447949323606
பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33629882680
கனடா
செல்லிடப்பேசி: +16478855474

Posted on 25 Mar 2018 by Admin
Content Management Powered by CuteNews