பிறப்பு : 21 சனவரி 1962 - இறப்பு : 28 யூன் 2015
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா ஈஸ்வரகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மையேன் பிரிந்தீரோ
எங்கு தான் சென்றீரோ
வாயார பெயர் சொல்லி
எம்மை தினம் அழைத்தீரே
உயிரார உணவு தந்து
எம்மை நீர் வளர்த்தீரே
ஆசைகள் எதுவும் இல்லை
எம்மை நீர் அணைப்பீரே
எங்கு தான் சென்றீரோ
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்தின்று
விண்ணோக்கி விரைந்தாலும்
எம் கண்விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்
என்றும் அன்புடன் நீர் அரவணைத்த
மனைவி, பிள்ளைகள்.
தகவல்
குடும்பத்தினர்