5ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்:



அமரர் தம்பு நடராசா
அன்னை மடியில் ******** ஆண்டவன் அடியில்
3 டிசெம்பர் 1921 ****** 3 ஏப்ரல் 2011

அமரர் நடராசா மகேஸ்வரி
அன்னை மடியில் ****** ஆண்டவன் அடியில்
31 யூலை 1933 ****** 25 யூன் 2015




தம்பு நடராசா

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பு நடராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே
போகும் எம் அன்பின் முன்பே!

எமக்கு ஆண்டவன் தந்த
அன்புத்தெய்வம் தான் எமது ஐயா
ஆவனியில் எமை விட்டு பிரிந்து
ஆண்டுகள் ஐந்து கழிந்ததுவோ

எப்போதும் உங்களின் நினைவுகள்
எம்முடன் கூட இருக்க வேண்டும்
என்பதற்காக எம்முடன் கூட
இருக்கும் போது ஒவ்வொரு நகைச்சுவை
எப்போதும் கூறுவீர்களே!

அதேபோல் ஆண்டவன் அணைப்பின் போதும்
உங்களிற்கு நீங்களே பச்சபுராணம்
ஓதி சித்திரை அமாவாசைத் தியன்று
இறையடி எய்தினீர்களே ஐயா

என் பெண் பிள்ளைகள் என் பொன் பிள்ளைகள்
என்று அடிக்கடி சொல்வீர்களே ஐயா

நீங்கள் சென்று ஐந்து ஆண்டு தனியே இருக்க
முடியவில்லை என்று எம்முடன் கூட
இருந்த அம்மாவையும் சேர்த்து அணைத்தீர்களே ஐயா
ஒரு கணம் பெரியக்காவை எண்ணினீர்களா?

நாம் ஒவ்வொருவராகா வெளிநாடு வரும்
போது ஐயாவின் பொன்மொழிகள்
பின்வருபவை நீங்கள் போவது சரி வருடம்
மொருமுறை வந்து எம்மை பார்க்க
வேண்டும் இப்போ நாமனைவரும்
எங்கள் வீட்டில் உங்கள் இருவரைத்தவிர..


நடராசா மகேஸ்வரி

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா மகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா ஆண்டொன்று அகன்றதும்
அன்றைய அந்த நிகழ்வுகள்
இன்று போல் உள்ளனவே அம்மா
மனிதனாகப் பிறந்த எல்லோர் உள்ளத்திலும் நிரந்தரமாய்
வாழும் உன்னத தெய்வம் தான் அம்மா

ஒரு மரத்து கிளிகள் கூடு விட்டு கூடு
பிரிந்து சென்றும் வருடம்மொருமுரை
வந்து தாய் என்றும் தந்தை என்றும்
பிள்ளைகள் என்றும் தழுவிக்கிடந்தோமே!

ஆனால் இப்போ அந்த சாய்மனக்கதிரை
தன் சோகக்கதை கூறுதெனை!
நாம் பெண்களாகப் பிறந்தொமே என்று எம்மை
நீங்கள் தூக்கி எறியவில்லை

அதற்கு மாறாக கோபுரமாய் நாம் வாழ நீங்கள் பட்ட
பாட்டை எப்படி நாம் மறப்போமெனை
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது!

அன்புடன்
பிள்ளைகள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள்

தகவல்
குடும்பத்தினர்

Posted on 29 Jun 2016 by Admin
Content Management Powered by CuteNews