பிறப்பு : 17 ஒக்ரோபர் 1955 - இறப்பு : 23 மே 2015
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontault-Combault ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேல் சுந்தரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
விண்ணுலகம் சென்ற ஐயா!
ஈசனுடன் இருக்கின்றீர் எங்கிருந்தலும்
எமக்கும் ஆசி வேண்டும் ஐயா!
பொங்கும் நல் வாழ்வில் குடும்ப விளக்கேற்றி வைத்தீர்
இல்லறம் தன்னில் நல்லறம் பொழிய வைத்தீர்
இல்லம் செழித்திடவும் இன்பம் தழைத்திடவும்
குடும்ப நலன் கருதி
நற்சேவை செய்து நின்றீர் அன்பும்
ஆதரவும் பொழிந்து நல் வாழ்வளித்தீர்
எதிர்பாரா வேளையிலே ஈசனடி சென்றுவிட்டீர்
ஆண்டு ஒன்று முடிந்ததய்யா நின் நினைவு பெருகுதையா!
உங்கள் பிரிவால் துயருறும் அன்பு
மனைவி, மகள், மகன்மார், மற்றும் மருமகன்
அன்னாரின் நினைவு தினத்தை பக்தியுடன் செய்திட
இறைவனை வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அவரது ஆத்மசாந்தி பிரார்த்தனை 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
வீட்டு முகவரி:
34 Rue du Maréchal Masséna,
77340 Pontault-Combault,
France.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுவேந்திரன் - பிரான்ஸ்
தொலைபேசி: +33953439607