பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: சுவிஸ் Zug, St.Gallen
அன்னை மடியில் : 20 ஏப்ரல் 1982 - ஆண்டவன் அடியில் : 7 பெப்ரவரி 2015
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug, St.Gallen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அசோக் சந்திரசேகரலிங்கம் அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.
கணமுமாய் நகர்கின்ற பொழுது கண்டோம்
விடிகின்ற பொழுதுக்குள் நீ இங்கில்லை
கனக்கின்ற மனதுக்கு ஆறுதலில்லை
உனைத்தேடும் குழந்தைக்கு பதிலில்லை
உள்ளத்தால் வாடியழ சக்தியுமில்லை
எண்ணத்தில் வாழுகிறாய்
அன்பாய் இதயத்துள்ளே
எங்குமே உன்பேச்சு ஒலிக்கின்றதே
திசைதோறும் தேடுகிறோம்
விடைதானில்லை எங்கள் உயிராக
உணர்வாக உறவாய் நின்றாய்
உதிரத்தால் இழைத்த உயிர் கரைந்து போக
பேச்சற்று பேதலித்து துயர் சுமக்கிறோம்
எம் நினைவோடு நிழலாக சுமந்து நிற்போம்
சாந்திக்காய் இறைதாளை அர்ச்சிக்கின்றோம்
துயர் சுமந்த நாட்களில் தோள்கொடுத்த
அனைத்து நண்பர்கள், உறவினர்களுக்கும்
எங்கள் இதயம் நிறைந்த நன்றியைப் பகிர்ந்து நிற்கிறோம்
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 16-05-2015 சனிக்கிழமை அன்று Restaurant Adler Saal, St. Georgenstr. 54, 9000 St. Gallen, Switzerland என்னும் முகவரியில் நடைபெறும். இந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதன் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786186619
செல்வரட்னம் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41764625110
இந்திராணி - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763964760
கிரி - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791979212