
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: தமிழீழம் வள்ளிபுனம்
வீரப்பிறப்பு : 4 யூலை 1973 - வீரச்சாவு : 9 மே 2009
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தமிழீழம் வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லெப். கேணல் பார்புகழன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் உதயதாஸ் அவர்களின் 6ம் ஆண்டு வீர நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஆறு ஆனாலும்
காலமெல்லாம் வரைந்து வைத்த ஓவியமாய்
எம்முடனே வாழ்ந்திடுவாய் உதயா!
மீண்டு வருவாய் என வழி பார்த்திருந்தோம்
விண்மீன்களாய் தான் தெரிகின்றாய்
இனிய மொழிபேசி இன்புற்று இருக்க வேண்டும்
இன்னுமொறு பிறவி நீ எம்முடன் இருக்க வேண்டி
இறைவனை வேண்டுகின்றோம்
பாசறை நாயகனாய் தலைவனின் தம்பியாய்
தமிழ் இனத்தின் தவப்புதல்வனாய் நீ
கொண்ட இலட்சிய பாதையிலே
நிற்கின்றோம் நாமும்
இன்றும் உன் நினைவுகளுடன் வாழும் குடும்பத்தினர்.
தகவல்
குடும்பத்தினர்