
அமரர் லட்சுமிபத்தி வல்லிபுரம்
மண்ணில் : 1 சனவரி 1926 - விண்ணில் : 18 செப்ரெம்பர் 2014
யாழ். நீர்வேலி போயிட்டியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு செல்வபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லட்சுமிபத்தி வல்லிபுரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்பை மட்டுமே அள்ளித்தந்த எங்கள் அம்மா
துன்பங்கள் அத்தனையையும் தூசாக்கிய அம்மா
தந்தையை இழந்து தவித்தபோதும் தளராது
ஐந்து பிள்ளைகளையும் ஆளாக்கிய எம் அம்மா
நோயென்று இதுவரை பாயிலே படுத்ததில்லை
இயலாது என்று இன்று வரை சொன்னதில்லை
எண்பத்தெட்டு வயதுவரை எம்மோடு இருந்துவிட்டு
விண்ணுக்குத் தனியாய் விரைந்தோடிப் போனதென்ன
முப்பத்தியொரு நாட்களாய் அழுகின்றோம் துடிக்கின்றோம்
ஆற்றிட நீ வரவில்லை
ஆண்டுகள் பல கடந்தாலும் உன் நினைவுகள்
எமைவிட்டு நீங்கப்போவதில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைவதாக
அம்மா என்னும் தெய்வம்
ஆயிரம் சொந்தங்கள்
அனைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னை போன்று
அன்பு செய்ய யாரும் இல்லை
இவ் உலகில்
உங்கள் பிரிவால் துயரமுறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 17-10-2014 வெள்ளிக்கிழமை அன்று கீரிமலையிலும், ஆத்ம சாந்தி பிரார்த்தனை 18-10-2014 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெறும். இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிறேமா(பேத்தி)
தொடர்புகளுக்கு
பிறேமா(பேத்தி) - இலங்கை
தொலைபேசி: +94773288570
செல்லிடப்பேசி: +94773128695
இரத்திரசிங்கம்(சிங்கம்-மகன்) - ஜெர்மனி
தொலைபேசி: +492922910134
செல்லிடப்பேசி: +4917630680896
வைரவநாதன் - கட்டார்
தொலைபேசி: +97450167006