அமரர் இரத்தினசிங்கம் யோகமலர்
பிறப்பு : 31 ஒக்ரோபர் 1947 - இறப்பு : 30 ஓகஸ்ட் 2012
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் யோகமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணில் மணிபோல எம்மை காத்து மண்ணில் வளமோடு
வாழவைத்து கண்ணில் தெரியும் தெய்வம்
என வாழ்ந்த அன்னையே – யோகமலர்(மம்மியே)
இன்று நீ மறைந்து ஓராண்டு ஆனாலும் – உங்களை
நாம் மறக்க நெஞ்சுரம் இல்லை.
ஆண்டு ஒன்றும் ஆனதே! அன்புத் தெய்வமே
உம்மை பிரிந்து.........
அன்புமுகமும் இனிய பேச்சும் புன்னகையும்
இப்போதும் நினைவில் நிழலாடுதே!
இன்பவாழ்வு நாம்வாழ எமக்கு இனியவை பல செய்த
உம்மை – எப்படித்தான் மறப்போம்?
குலவிளக்கே! இன்றும் என்றும் நினைப்போம்
துயரம் சுமந்த நெஞ்சோடு உங்கள் தூயமுகந்தேடி
நின்றோம் – வாழ்வில்
காலம் விரைந்து சென்றிடனும் உங்கள் பாசபினைப்பை நினைப்போம்.
ஊரும் உறவும் உயர்வாய் நினைத்து, உடன் பிறப்புக்கள்
நொந்து கண்கள் பனிந்து, வாடாமலராய் வாழ்ந்து மறைந்த
மம்மியை நினைக்க –
ஓராண்டு சென்ற மாயமென்ன?
தகவல்
கணவன், பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
இரத்தினசிங்கம்(கணவன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94777548710
சதீஸ்குமார்(மகன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94773556368
சுப்பிரமணியம்(அண்ணன்) - இலங்கை
தொலைபேசி: +94213217044
சிந்துஜா - பிரித்தானியா
தொலைபேசி: +442083914893