அமரர் லெப். கேணல் பார்புகழன்
(சுப்பிரமணியம் உதயதாஸ்)
வீரப்பிறப்பு : 4 யூலை 1973 - வீரச்சாவு : 10 மே 2009
யாழ்.நீர்வேலியை நிலையான முகவரியாகவும், தமிழீழம் வள்ளிபுனத்தை இறுதி முகவரியாகவும் கொண்டிருந்த பார்புகழன் என அழைக்கப்பட்ட சுப்பிரமணியம் உதயதாஸ் அவர்களின் 3ம் ஆண்டு வீர நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்று கடந்து விட்டது உதயா
ஆறவில்லை எங்கள் துயரங்கள் நெஞ்சில்
நெடுந் தூரம் சென்றுவிட்டாய் கலங்கிதான் நிற்கின்றோம்
யாரால் தான் முடியும் உன்னிழப்பை ஈடுசெய்ய
அழகு மொழி பேசி அனைவரையும் உன் வசமீர்த்தாய்
தன்னிகரில்லா திறமையால் கல்வியிலே சிறந்தோங்கினாய்
எம்மினம் காக்க தலைவன் வழியிலே நின்றாய்
பாசறையிலே பகைவனுக்கு பறைசாற்றினாய்
விடுதலையின் வேட்கையால் கேணலாய் நின்றாய்
பூவாக புன் முறுவல் முகத்திலே பூத்திருக்க
அன்பான மனையாளுடன் இல்லறத்தில் கலந்திருக்க
ஆசைமகனின் இனிய அன்பால் பூரித்திருக்க
அன்பான உறவுகள் பாசத்துடன் இணைந்திருக்க
முள்ளிவாய்க்கால் உனக்கு முடிவானதா?
ஓயாது இலட்சியம் நிச்சயம் மலரும் உன் நினைவுகள்
நித்திலத்தில் நீ விட்டுச் சென்ற பாதையிலே!
தொடரும் எம் பயணம்.
வாழ்க உன் புகழ் இவ் வையகத்தில்.
தகவல்:
அண்ணா குடும்பம், மனைவி, மகன்
தொடர்புகளுக்கு
- சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797856224