31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்: அமரர் இரத்தினம் தங்கம்மா



அமரர் இரத்தினம் தங்கம்மா
அன்னை மடியில் : 10 செப்ரெம்பர் 1920 — ஆண்டவன் அடியில் : 28 மே 2011



நீர்வேலியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் தங்கம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

வாசம் தந்து மறைந்த மலரல்ல நீங்கள்
எங்களின் இதயத்தினுள் வாழ்ந்த
வாடாத மலரல்லவா - நீங்கள்

எங்களின் விழியில் நீரைத் தந்து சென்று
30 நாள் ஆகிவிட்டதுவே - ஆனால்
எங்களின் இதயத்தினுள் உங்கள் நினைவுகள்
இசை மீட்டிக் கொண்டல்லவா உள்ளது

உங்களின் பயணம் எங்களுக்கு
ஓர் வலிதான் - இருப்பினும்
உங்கள் நினைவுகள் என்றும் வாடாத
ரோஜாவைப் போல் மலர்ந்திருக்கும்
எங்களின் இதயத்தினுள்

விதையாய் வந்து தலைவியாய் நின்றீர்கள்
மரமாய் நின்று செல்வங்களை பெற்றெடுத்தீர்கள்
காயாய் வந்து பேரப்பிள்ளைகளுடன்
விளையாடினீர்கள் கனியாய் வந்து
பூட்டப்பிள்ளைகளையும் கண்டீர்கள்

மலராய் வந்து அன்பையும் வீசித் தந்தீர்கள்
வேராய் நின்று அனைத்தையும்
தாங்கி நின்ற நீங்கள் - இன்று எங்கு
சென்றுவிட்டீர்கள் - நீங்கள் சென்று
30 நாள் ஆகி விட்டும் - செழித்து நிற்கும்
மரத்தைப் போல் எங்களின் இதயத்தினுள்
என்றென்றும் நிலையாய் நிலைத்திருப்பீர்கள்

நீங்கள் எங்களைவிட்டுப் பிரிந்தாலும் எங்கள் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டே இருக்கிறீர்கள். அன்னையாய், தந்தையாய், தெய்வமாய் வாழ்ந்து மீளாத்துயில் கொண்ட உங்கள் பிரிவால் துயருறும் மகன்கள் மதியாபரனம், லோகேஸ்வரன், யோகநாதன், மகள்கள் கனகேஸ்வரி, இராஜேஸ்வரி, பேரப்பிள்ளைகள் சுவந்தா, சுபாஸ்(அவுஸ்திரேலியா), இந்துசா(சுவிஸ்), கிருஷ்ணா(கொழும்பு), நர்மதா, தேவனந்தா, துஷாந்த்(இலண்டன்), தர்சிகா(அவுஸ்திரேலியா), லக்சிகா, லக்சன், பகிர்தா, நயனி(அவுஸ்திரேலியா), மிதுலன், விஜிதன்(அவுஸ்திரேலியா), வக்சன்(அவுஸ்திரேலியா), வேணுசா, பூட்டன் டினுயன்.

தகவல்
இராஜேஸ்வரி(மகள்), தர்சிகா(பேத்தி)
தொடர்புகளுக்கு
இராஜேஸ்வரி - அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61421121422
தர்சிகா - அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61469146346

Posted on 26 Jun 2011 by Admin
Content Management Powered by CuteNews