சுமார் நூறு ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்ததும் திரு. பண்டாரம் சின்னையா அவர்களின் காணியின் கிழக்கு எல்லையில் இருக்கும் இலுப்பை மரத்தின் அடிவாரத்தில் திரிசூலம் உருவத்தில் இருந்ததுமான காளி அம்மனை ஊர்மக்கள் சிறு கொட்டில் அமைத்து தினசரி தீபமேற்றி வழிபட்டு வந்தனர். இவ்வாலயத்தை விரிவாக்க எண்ணிய இவர்கள் திருமதி. தங்கரத்தினம் இராசையா அவர்களின் வழிகாட்டுதலில் ஊர் இளைஞர்கள் முன்னின்று உள்ளூர் மக்களினதும் வெளிநாட்டில் வாழும் உறவினர்களினதும் நலன் விரும்பிகளினதும் பண உதவியுடன் காளி அம்மனுக்கு அதே இடத்தில் ஆலயம் அமைத்துஇ அதற்கு வலப்புறமாக முத்துமாரி அம்மனுக்கும் ஆலயம் அமைத்துஇ ஐம்பொன்னிலான பெரிய சிலை வடித்து பிரதிஷ்டை செய்து ௧௯௭௦ம் ஆண்டு ஆவணி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று அன்றிலிருந்து தினசரி ஆறுகாலபூசைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் ௨௦௰ம் ஆண்டு முதல் ஆலயம் திரு.ஜெயராசா அவர்களின் திட்டமிடுதலிலும்இ வழிகாட்டுதலிலும்இ கோவில் கட்டிட நிபுணர் திரு. கருணாகரன் அவர்களது கைவண்ணத்தில் புனரமைக்கப்பட்டு பெரிய வழிபாட்டு மண்டபமும் காளி அம்மனுக்கு எதிர்புறமாக வீரபத்திரர் ஆலயமும் வலப்பக்கத்தில் வைரவர் சூலமும் நிறுவப்பட்டது. ஆலய புனர் நிர்மாணம் நிறைவு பெற்றதும் புனருத்தாபரண மகா கும்பாபிஷேகம் 06.06.2011ல் சிறப்பாக நடைபெற்றது.
அந்த தினத்திற்குப்பின் ஒவ்வொரு ஆண்டும் அத்தினத்தில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளும் மகேஸ்வர பூசையும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திரு. இராசையா குடும்பத்தின் நிதி உதவியில் புதிதாக கொடிமரம் நிர்மானிக்கப்பட்டு 12.02.2016ம் திகதிக்கு கொடியேற்றத்துடன் பிரமோற்சவ பெருவிழா ஆரம்பமாகி 23.02.2016 செவ்வாய் தீர்த்தத்திருவிழாவுடன் இனிதே முடிவடைய உள்ளது.
மகேற்சவ குருவாக நெல்லிக்கினற்றடியைச் சேர்ந்த கிரியா பூசண விபூசணன் சிவஸ்ரீ வே. தில்லை அம்பல குருக்கள் அவர்கள் பணியாற்ற உள்ளார்.
தற்போது ஆலயத்தின் பிரதான குருவாக சிவஸ்ரீ ந. கோபி ஐயா அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.
சுபம்.
அனைவருக்கும் அம்பாள் துணை நிற்பார்.
ஆக்கம்: S. Balasingam [Former President, Secretary, Member of Trustees & Advisory Committee of NWAC]