நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடா
வணக்கம்,
நீர்வேலி மக்களின் முதலாவது கடற்கரை ஒன்று கூடல் கடந்த July 27th 2014 Sunday அன்று நீர்வேலி சங்கத்தின் தலைவர் ப. ஜெகன் தலைமையில் மக்களின் ஆதரவுடனும், காலநிலை நன்றாக இருந்ததாலும் மகிழ்ச்சியாக நடைபெற்றது.
முதலில் மௌன அஞ்சலியும் அதைத் தொடர்ந்து சாரங்கா சிவம், பைரவி சிவம், அவர்களின் தேவார இசையும், தொடர்ந்து செல்வன் யசாகன் ஜெகன் தமிழில் இசைத்த கனடா தேசிய கீத இசையுடனும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த சிறுவர் சிறுமிகளுக்கு எமது நன்றிகள்.
மேற் கொண்டு சங்கத்தின் தலைவர் ப. ஜெகன் சமூகமளித்தவர்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றியதுடன், Darlington Park and Beach பற்றிய
விபரங்களையும் வழங்கினார். தொடர்ந்து தொண்டர்கள் பற்றிய விபரத்தை கூறினார்.
1. முதலுதவி சிகிச்சை (First-Aid): திருமதி. சாந்தி பசுபதி
2. Lifeguard:செல்வன் அபிசேக் கண்ணன் & செல்வன் சஜீவன் சிவதாசன்
3. புகைப்பிடிப்பு: திரு. பிரகாஷ்
இவர்களுக்கு எமது நன்றி!!!
எமது அழைப்பிதளில் குறிப்பிட்டது போன்று எல்லா உணவு வகைகளும் பரிமாறப்பட்டது. குழந்தைகளும் பெண்களும், ஆடவர்களும் நீராடி மகிழந்தார்கள். சிறுவர்களும் இளைஞர்களும் விளையாடினார்கள். பெரியோர்கள் அந்த அழகான இயற்கை தாய் மண்ணின் நிவைுகளை மீட்டு அனுபவித்தார்கள்.
மேலும் உணவுவகைகளை எடுத்து வந்தவர்களுக்கும், அங்கு சுவையாக உணவை
தயார் செய்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி.
அடுத்து எமது இந்த கடற்கரை ஒன்றுகூடலுக்கு அனுசரனை வழங்கிய நீர்வேலி கனடா வர்த்தகர்கள்:
1) Suncity Supermarket - Mr. Kannan
Suncity Super Market உரிமையாளர் கண்ணன் உணவுப் பொருட்கள் அனைவற்றையும் கொள்முதல் விலையில் வழங்கியதுடன் அவர்களது குடும்பத்தினரும் பங்கு கொண்டு நன்கொடையும் வழங்கினார்கள். அத்துடன் தளபாடங்களை இலவசமாக வழங்கியதுடன் பேரூந்து தரிப்பிடத்தில் அனைவரின் வண்டிகளை நாள் முழுவதும் தரிப்பதற்கு ஒழுங்கு செய்து தந்தார்கள்.
2) Ideal Escape - Mr. Sivananthan. P
Ideal Escape Vacation Ltd. ஸ்தாபனத்தில் இருந்து சிவா. பொன்னையா அவர்கள் இந்த
பயணத்திற்காக போரூந்து வண்டிகளை குறைந்த விலையில் ஒழுங்கு செய்ததுடன் அவரும் கலந்து கொண்டு நன்கொடையும் வழங்கினார்.
3) G2000 Express - Mr.T.Ganga
G2000 Express இருந்து கெங்கா மற்றும் சிறிநாதன் சகோதரர்கள் ஒரு பார ஊர்தியை எமது பயனத்திற்காக தளபாடங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் BBQ Machine ஆகியவற்றை கொண்டு செற்று வருவதற்காக இலவசமாக பயண்படுத்தியதுடன் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு நன்கொடையும் வழங்கினார்கள்.
இம் மூன்று வர்த்தகர்களுக்கும் நீர்வேலி நலன்புரி சங்கத்தின் சார்பிலும், சமூகமளித்வர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடற்கரை ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றதிற்கு இறைவனுக்கு நன்றி கூறிக்கொண்டு அன்று சமூகமளித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு ஒவ்வொரு வருடமும் ஒரு கடற்கரை ஒன்று கூடல் சிறப்பாக நடை பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறோம்.
நன்றி.
ப. ஜெகன்
நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடா.